Our ministries

நமது ஊழியங்கள்:

  1. சுதேச மிஷனெரிகளின் ஊழிய மேம்பாடு:

இந்தியாவெங்கிலும் தேவ அழைப்பு பெற்று ஏற்கனவே மிஷனெரி   ✖️ பணித்தளத்தில் இருப்போருக்கு ஜெப உதவி, பயிற்சி மற்றும் தேவையான உதவிகளைச் செய்து இன்னும் ஆத்தும அறுவடை பணியை விரிவாக, துரிதமாக செய்ய உதவுகிறோம்.

நமது தற்போதைய பணித்தளங்கள்: திருச்சி முசிறித் தாலுக்காவிலுள்ள கிராமங்கள், ஒரிசாவிலுள்ள கோராபுட் மாவட்டத்தில் குயி இன மக்கள் மத்தியில்.

       2.   சபை பாதுகாப்புப் பணி:

    இன்று சபையானது எதிர்ப்பு, உபத்திரவம், கள்ள உபதேசம்,பிரிவினை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே சபையானது  எதிர்ப்பாளர்களால் பாதிக்கப்படாமல் இருக்க சட்ட உதவி ஆலோசனை, சபையை சட்டப்படியாக பதிந்து நிர்வகிப்பது, ஊழியர் அங்கீகாரம் மற்றும் உரிமம் போன்றவற்றை வழங்கி முறைப்படியாக நடத்திச் செல்ல வழி காட்டுகிறோம். மட்டுமல்ல எதிர்ப்பாளர்களால் பாதிக்கப்பட்ட சபை மற்றும் ஊழியத்திற்கு இயன்ற உதவியை செய்து மீண்டும் ஊழியத்தை தொடர கைகொடுக்கிறோம். சபையை ஆரோக்கியமான உபதேசத்தில் வளர்ப்பதற்காக  ஏராளமான முகாம்கள் மற்றும் இலவச வேதாகமக் கல்லூரி வகுப்புகளை அவர்களிடத்திற்கே சென்று நடத்துகிறோம்.

3.  டெண்ட் மேக்கர்ஸ் பயிற்சி: [Tent Makers Training]

    அப். பவுல் கூடார தொழில் செய்து கொண்டு கலாத்தியா, கொரிந்து, தெசலோனிக்கியா மற்றும் எபேசு பட்டணங்களில் சுவிசேஷம் அறிவித்ததை நாம் புதிய ஏற்பாட்டில் வாசித்து பார்க்கிறோம். இதுபோன்று பணிபுரிந்து கொண்டே தேவனுடைய பணியை செய்யும் திரளான ஊழியர்களை உருவாக்க பயிற்சி முகாம்களை நடத்துகிறோம். இவர்கள் மூலமாகவும் சுவிசேஷத்தின் மாபெரும் தேவையை சந்திக்க முயற்சி எடுக்கிறோம்.

4. சமூகப்பணி சுவிசேஷம்:

    இன்றைய காலகட்டத்தில் நற்பணிகள் மூலமே சுவிசேஷத்தை  எதிர்ப்பின்றி எளிதாகவும்,ஆழமாகவும் அறிவிக்க முடியும். ஆகவே இந்தியாவில் உள்ள அநேக கிராமங்களில் தன்னார்வமாக சமூகபணி செய்ய வருகிறவர்களை குழுவாக ஏற்படுத்தி ‘Reborn club’ களை ஆரம்பிக்க தரிசனத்தோடு செயல்படுகிறோம்.  இதன் மூலம் 1. இலவச மருத்துவ முகாம்கள் 

2.  அனாதைகள், திக்கற்ற முதியோர்கள் போன்றோருக்கு அவர்களிருக்கும் இடத்திற்கே சென்று உணவளித்தல் 3. இலவச டியூஷன், தையல் மற்றும் கணினி பயிற்சி வகுப்புகள் 4.மது மறுவாழ்வு மையம் 5. ஆலோசனை மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி அதன் வழியாகவும் சுவிசேஷம் அறிவிக்கிறோம்.

5. வேதாகமக் கல்லூரிகள் மற்றும் இதர ஊழியங்கள்:

     தேவனுடைய சபைகளின் வளர்ச்சிக்காக நாம் வேதாகமக் கல்லூரி வகுப்புகளை ஆன்லைனிலும் மற்றும் நேரடி வகுப்புகளாகவும் நடத்துகிறோம். திருநெல்வேலி, கொடைக்கானல்,திருச்சி, சென்னை  நகரங்களிலும் இலங்கையில் உள்ள வவுனியா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வகுப்புகள் நடைபெறுகிறது. சீக்கிரத்தில் வட இந்தியாவிலுள்ள நமது மிஷனெரி பணி தளங்களில் அநேக இலவச வேதாகமக் கல்லூரிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இது தவிர குடும்ப செமினார்கள், ஊழியர் பயிற்சி முகாம்கள், ஜெப ஐக்கிய கூடுகைகள்,கன்வென்சன் கூட்டங்கள், சிறுவர் & வாலிபர் ஊழியங்கள் போன்றவற்றின் மூலம் சபையின் எழுப்புதலுக்கான பணிகளும் நடைபெறுகின்றன. 


— Oscar Wilde.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started